2024 ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு.!

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் உத்தேச கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியிடங்களுக்கான TET தகுதித்தேர்வு ஜூலையில் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பாணை ஏப்ரலில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 1,766 இடங்களுக்கான 2ம் நிலை ஆசிரியர் பணிக்கான (SGT) தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 இடங்களுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகி ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுநிலை ஆசிரியர்கள் பணிக்கு 200 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மே மாதம் இதன் அறிவிப்பு வெளியாகி, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்றுள்ளனர்.