ஆசிரியர் தகுதி தேர்வு! ஒரு வாரம் காலஅவகாசம் நீடிக்க வேண்டும் – ஈபிஎஸ்

Default Image

மூன்று நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல் உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.

தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, நேற்றுவரை 3.41 லட்சம் தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால், இணையதளம் தாமதமாக செயல்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல் உள்ளது. எனவே விண்ணப்பிக்கும் தேதியை மேலும் ஒரு வாரம் கால நீட்டிப்பு செய்திட இந்த அரசை வலியுறுத்திகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்