ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெறவிருந்த ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் / காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆதி திராவிட நலத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.