இன்று நடைபெறுகிறது ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு.!

கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக திருத்திய கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் தொடக்க பள்ளி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி, இன்று தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும். நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
முன்னதாக, தலைமை ஆசிரியர்களுக்கு மே 26, இடைநிலை ஆசிரியர்களுக்கு மே 29ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.