டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு .!
4 மாவட்டங்களிலும் டீ கடைககளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் இந்த நான்கு மாவட்டங்களிலும் இந்த அறிப்பு பொருந்தும்.