300 அடி பள்ளத்தில் பருப்பு லோடுடன் தொங்கிய டாரஸ் லாரி.!

Default Image
  • தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளி மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
  • தகவல் அறிந்து விபத்து இடத்திற்கு வந்த லோயர்கேம்ப் காவல்துறையினர் பருப்பு மூட்டைகளை இறக்கி கிரேன் மூலம் லாரியை மீட்டனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து டாரஸ் லாரி ஒன்று தேனிக்கு பாசிப்பருப்பு ஏற்றிக் கொண்டு வந்தது. தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளி மலைப்பாதையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு விபத்தில் சிக்கி 300 அடி பள்ளத்தில் லாரியின் பாதி பகுதி பள்ளத்தாக்கில் விழுமாறு இருந்தது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஓட்டுனர் சாமர்த்தியமாக லாரியை நிறுத்தியதால் முன்பக்கம் மட்டும் பள்ளத்தில் தொங்கியவாறு நின்றது. இதனிடையே அந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து விபத்து இடத்திற்கு வந்த லோயர்கேம்ப் காவல்துறையினர் பருப்பு மூட்டைகளை இறக்கி கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்