நெல்லை, தூத்துக்குடியில் டாடா… தமிழ்நாட்டில் ரூ.7000 கோடி கூடுதல் முதலீடு!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பின் பிரபல நிறுவனமான “அடிடாஸ்” நிறுவனம், உலகில் முன்னணி நிறுவனமான போயிங் நிறுவனத்தின் மையம் சென்னையில் அமையவுள்ளது. இதுபோன்று, தமிழகத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர்.
ஜனவரி 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு – தமிழக அரசு அறிவிப்பு
இந்த நிலையில், தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.7000 கோடி கூடுதல் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகவுள்ளது. ரூ.7,000 கோடி முதலீட்டில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய டாடா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும்.
டாடா நிறுவன விரிவாக்கம் மூலம் 6 ஆண்டுகளில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், நெல்லை, தூத்துக்குடியில் செம்பார்க், டாடா பவர் நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளது. செம்பார்க், டாடா பவர் நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இதுபோன்று, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூரில் காலனி உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.