டாஸ்மாக் மதுபான டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கடலூரில் கைது செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 45 நாட்களுக்கு பிறகு கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு, உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் மதுக்கடைகள் திறப்பதன் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மதுக்கடைகளில் மதுபான வாங்க டோக்கன் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதனால், மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்களுக்கு கிழமை வாரியாக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள கிழமைகளில் மதுவை வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டோக்கனுக்காக மதுப்பிரியர்கள் பலர் காத்து கிடக்கும் நிலையில், கடலூரில் டோக்கன் வாங்கிய சிலர் அதை கலர் ஜெராக்ஸ் எடுத்து, டோக்கன் இல்லாதவர்களிடம் விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த காவல்துறை உடனடியாக சென்று மோசடியில் ஈடுபட்ட 16 பேரை கடலூர் காவல்துறை கைது செய்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…