நாளை முதல் சென்னையில் விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.
சென்னையில் கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பரவல் உள்ள இடமாகிய பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த மதுபான கடைகள் நாளைமுதல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மதுபான கடைகள் இயங்காது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் மதுக்கடையில் கிரில் பகுதிக்கு வெளியே கவுண்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும். தடுப்பு அமைத்து அதன் அளவும் வேகமும் குறிப்பிடப்படவேண்டும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்.
சாமியான பந்தல் மற்றும் மைக் செட் ஏற்பாடு செய்ய வேண்டும், வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க குறைந்தது மூன்று அடி இடைவெளி விட்டு 50 வட்டங்கள் வண்ணத்தினால் அல்லது பிளீச்சிங் பவுடர் கொண்டு அமைக்கப்படவேண்டும். தன்னார்வலர்கள் அல்லது மது கடை ஊழியர்கள் ஐந்து பேரை கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கடையில் போதுமான இடம் இருந்தால் இரண்டு கவுண்டர்களை அமைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது கடையின் சுற்றுப்புறங்களில் பிளீச்சிங்க் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும், அனைத்து வாடிக்கையாளர்களும் சனிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னரே கவுண்டருக்குள் அனுமதிக்கப்படவேண்டும். கடை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காட்டன் கையுறை மற்றும் முக கவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிய வேண்டும். அனைத்து பணிகளை முடித்த பின்பு மாலை 3 மணிக்குள் கடையில் சுற்றுப்புறத்தை தூய்மை செய்து விட்டு, கடை என்னுடன் மாவட்ட மேலாளர் புகைப்படம் ஒன்றை அனுப்ப வேண்டும். மாவட்ட மேலாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே கடைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். மேற்காணும் பணிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும், இது தவறும் பட்சத்தில் அந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…