நாளை முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!
- தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு.
- வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட டாஸ்மாக் மேலாண் நிர்வாகம்.
தமிழகத்தில் ஜூன் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 27 மாவட்டங்களில், காலை 10 மணி முதல் 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது டாஸ்மாக் மேலாண் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,
- மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்க கூடாது. சில்லறையாக தான் விற்க வேண்டும்.
- டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
- மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும்.
- கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்.
- 2 பணியாளர்கள், மதுபானம் வாங்க வருவோரை சமூக இடைவெளியுடன் வாங்குமாறு நடைமுறைப்படுத்த வேண்டும்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டிருக்க வேண்டும்.
- 2 பணியாளர்களை நியமித்து, மதுபானம் வாங்க வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த வேண்டும்.
உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கவனிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!#tasmac pic.twitter.com/0Bl4urM2nm
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 13, 2021