இயேசு பிரான் உயிர் தியாகம் செய்த புனித வெள்ளிக்கிழமை அன்று டாஸ்மாக் கடைகளையும்,மதுக்கூடங்களையும் மூடிட ஆணை பிறப்பிக்கவேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
அதில், ‘உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து தரப்பினரும் இயேசு பிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையினை துக்கநாளாக “புனித வெள்ளியாக” அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தியாகத்தை நினைவு கொள்ளும் வகையில் உண்ணாநோன்பிருந்தும், இரத்த தானம் செய்தும் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
உலக வரலாற்றை இரண்டாக பிளந்த, இந்த மகத்தான தியாகத்தை அங்கீகரிக்கின்ற வகையில் புனித வெள்ளியன்று (15-4-2022) டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன். அத்தகைய அறிவிப்பு இயேசுவின் உயிர் தியாகத்திற்கு சிறப்பான அஞ்சலியாக அமையும்.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…