#BREAKING: 3 நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு..!

ஏப்ரல் 4,5,6 -ஆம் தேதி மற்றும் மே 2-ஆம் தேதி ஆகிய தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், ஒருபுறம் அனைத்து கட்சியினரும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் அரசு தேர்தலை அமைதியான முறையில் நடத்த அதற்கு தேவையான வழிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையடுத்து ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை எனவும், மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025