டாஸ்மாக் கடைகளை உடேன மூட வேண்டும் -தேமுதிக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்  

Default Image

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், கொரோனா முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை  நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ,துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

தீர்மானங்கள் விவரம் :

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

கொரோனா முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் ,மத்திய அரசு ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு அதன் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மத்திய ,மாநில அரசுகள் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமும் , முதல் தவணையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வாகன கட்டணம் என்பது சாலை வசதிகள் சீராக இருந்தால் தான் வசூலிக்க வேண்டும்.

அனைத்து ஆறு,ஏரி ,குளம் போன்றவைகளை தூர்வாரி மழை நீரை சேமிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக இந்த சாலைகளில் கவனம் செலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்தும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office
kaliyammal seeman