பிப்-5 ஆம் தேதி இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது..!
வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.
சென்னையில் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வருகின்ற 5ம் தேதி அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை மாநகர கலெக்டர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி மதுபான கடைகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுக்கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மது கூடங்கள் ஆகியவற்றிற்கு 5-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.