இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…! ஆட்சியர் அதிரடி உததரவு..!

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உததரவு. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், தடையை மீறி மதுபான விற்பனை, மதுபான கடத்தல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்