TASMAC : தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வழக்கமாக தேர்தல் நடைபெறும் நாளன்று மதுபான கடைகள் மூடப்படும். அதே போல இந்த முறையும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்கள் ஏப்ரல் 17, 18 ஆகிய நாட்கள் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் தமிழகத்தில் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், 7 கட்ட மக்களவை தேர்தல் முடிந்து, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியிடப்படும் நாளன்றும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…