தமிழகத்தில் முதல் நாளில் மது விற்பனை ரூ.170 கோடி.! மதுரை முதலிடம்.!
நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.170 கோடி வரை மது விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து 40 நாள்களாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் கடந்த திங்கள்க்கிழமை டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் திறக்கப்பட்டது.
நேற்று , தமிழகத்தில் 43 நாட்களுக்கு பிறகு சென்னையை தவிர மற்ற இடங்களில் காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டு மாலை 5 மணி வரை கடை இயங்கின. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.170 கோடி வரை மது விற்பனை நடைபெற்று உள்ளது.
மற்ற நாள்களில் ரூ.80 கோடி வரை மது விற்பனையாகும் நிலையில் நேற்று அதை விட இரண்டு மடங்கு வசூல் ஆனதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு
மது விற்பனை நடைபெற்று உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும் , சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை நடைபெற்று உள்ளது.