2023-24 ஆண்டுக்கான டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு.!

Tasmac

சென்னை : தமிழ்நாட்டில் 2023 – 2024 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம், ரூ. 45,855.67 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பு சமர்பிக்கப்பட்டது. அதில், 2023-2024 நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.45,855,67 கோடி கிடைத்துள்ளது.

இந்த வருவாய் கடந்த ஆண்டை விட, ரூ.1,734.54 கோடி கூடுதலாகும். 2022 – 2023 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,121.13 கோடி வருவாய் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கான வருவாய் குறித்த பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 2019 – 2021 – ரூ.33,133.24
  • 2020 – 2021 – ரூ.33,811.15
  • 2021 – 2022 – ரூ.36,050.65
  • 2022 – 2023 – ரூ.44,121.13
  • 2023 – 2024 – ரூ.45.855.67

இதனை சாய்த்து பார்க்கையில், ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் வருவாய் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஷச்சாராய பற்றிய விவரம்

அதேபோல்,  2023 – 2024 ஆண்டில் 12,431 விஷச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்தாகவும், எரிசாராயம் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.64 லட்ச லிட்டர் விஷச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் கொள்ளை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்