கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறி, சென்னை செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையில் , மேற்பார்வையாளரின் மண்டையை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவரம் – அம்பேத்கர் நகரில் உள்ள அந்த டாஸ்மாக் கடையில், மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு மது வாங்க வந்த ஒருவரிடம், டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ராமன் கூடுதலாகப் பணம் கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் மறுத்ததால் மேற்பார்வையாளர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற மது வாங்க வந்த நபர், ராமனின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.
மண்டை உடைந்த நிலையில் அலறித்துடித்த ராமனை அங்கிருந்தவர்கள் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார், மண்டையை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…