இனி டாஸ்மாக் ஓப்பன் மதியம் 12 மணிக்கு இல்லை…!! புதிய நேரத்தை முடிவு செய்த தமிழக அரசு!!
- டாஸ்மாக் நிறுவனம் என்பது தமிழக அரசின் மிகப் பெரும் வருமானம் வரும் ஒரு துறையாகும்
- ஆண்டிற்கு கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் டாஸ்மாக்கிலிருந்து மட்டும் வருமானம் கிடைக்கிறது
பூரண மதுவிலக்கு என்னும் பேச்சு தமிழகத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருப்பது வாடிக்கையான ஒன்று. வாடிக்கை என்பதை விட அது கேளிக்கையான ஒன்று என்றே கூறலாம். கடந்த 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முதலில் 500 டாஸ்மாக் கடைகளையும் மூடினார்.
தற்போது இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பல விதிகளை மீறி பல நூறு புதிய கடைகளை திறந்துள்ளார். இந்நிலையில் காலை 10 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்படும் என்று இருந்த நேரத்தை பகல் 12 மணிக்கு என இரண்டு வருடத்திற்கு முன்னர் மாற்றியது தமிழக அரசு.
தற்போது இருக்கும் 4,165 மதுக்கடைகளில் இந்த நேரமே பின்பற்றப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை செய்து மதுக்கடைகளை பகல் 12 மணிக்கு என்பதைவிட மதியம் 2 மணிக்கு திறக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.