தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கொரோனாத் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ந்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.அவ்வாறு பொது ஊரடங்கு அமலில் இருக்கும் போதே மே 7ந்தேதி அன்று தளர்வுகளோடு சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பிற பகுதிகளில் செயல்படும் 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது
இதனைத்தொடர்ந்து, ஆக.,18ந்தேதி முதல் தலைநகர் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.இந்நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதே போல தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயப்பட்டுவந்தது.
இந்தநிலையில் இன்று முதல் தமிழகமெங்கும் உள்ள டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…