ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அந்த வகையில்,நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்;ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக,டாஸ்மாக் நிர்வாகம் தனது அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
“நாளை 23.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் முழு அமல்படுத்தப்படவுள்ளது.இதன்காரணமாக,நாளை 23.01.2022 அன்று அனைத்து சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்.எனவே, அனைத்து மாவட்ட மேலாளர்களும் இதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்,மதுப்பிரியர்கள் சிலர் இன்றே மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…