ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்;ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக,டாஸ்மாக் நிர்வாகம் தனது அறிவிப்பில் முன்னதாகவே கூறியுள்ளதாவது:
“23.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் முழு அமல்படுத்தப்படவுள்ளது.இதன்காரணமாக, 23.01.2022 அன்று அனைத்து சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்.எனவே,அனைத்து மாவட்ட மேலாளர்களும் இதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்,மதுப்பிரியர்கள் சிலர் நேற்றே மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…