உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூடல்.?

TASMAC

சென்னை, சேலம், திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மே 1ஆம் தேதியை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட உள்ளன. 

மே 1ஆம் தேதி உலகம் முழுக்க உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூட கோரி உத்தரவிட்டு வருகின்றனர்.

வழக்கமாக காந்தி ஜெயந்தி, முக்கிய திருவிழா உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு மதுபான கடைகள் மூடப்படுவது வழக்கம் அது போல தான் தற்போது உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, ஏற்க்கனவே, சேலம், தென்காசி,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மே 1ஆம் தேதி டாஸ்மாக் மூடப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்த நிலையில் தற்போது சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி, வரும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் ஆகியவை திறக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உத்தரவிட்டு வருவதால் அடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மே 1ஆம் தேதி இயங்காது என அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்