மக்களவை தேர்தல்..! டாஸ்மாக்கில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என அதிரடி உத்தரவு

Tasmac: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையமானது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Read More – மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்..! திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

அதில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்பதும் அடக்கமாகும். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும் போது, “ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காலங்களில் டாஸ்மாக் கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் மது வகைகள் இருப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மது விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 30 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும்.

Read More – கமலின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது … வானதி சீனிவாசன் விமர்சனம்!

எனவே கடையின் சராசரி விற்பனை 30 சதவீதத்துக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்கக்கூடாது. ஒரு நபருக்கு 4 குவாட்டருக்கு மேல் விற்கக்கூடாது. அரசு அனுமதித்த மதியம் 12 மணி இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் இயங்க வேண்டும். பார்களில் மதுபானம் இருக்க கூடாது, அப்படி இருந்தால் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்” என கூறினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்