இந்தாண்டு அரசு டாஸ்மாக் வருவாய் வெகுவாக குறைந்தது… மது பாட்டிலில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு முடிவு…

Default Image

தமிழக சட்டப் பேரவையில் நேற்று எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மது வருவாய் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி,

  • கடந்த 2018-19ம் ஆண்டில் அதிகபட்சமாக தமிழக அரசுக்கு அரசு மதுபானக் கடைகள் மூலம் மது வருவாய் ₹31,157.83 கோடி வரை கிடைத்துள்ளது.
  • இந்த ஆண்டு 2019-20ம் ஆண்டுக்கான மது வருவாய் கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை ₹28,839.08 கோடி வரை  கிடைத்துள்ளது. 
  • இது, கடந்த ஆண்டைவிட ₹2,318.75 கோடி வருவாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி:

  • தமிழகத்தில் இருந்து 2018-19ம் ஆண்டில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பீர் ஏற்றுமதி மூலம் தமிழக அரசுக்கு ₹577.91 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
  • 2019-20ம் ஆண்டு, பிப்ரவரி 29ம் தேதிவரை பீர் ஏற்றுமதி மூலம் ₹339.88 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    புதிய மாற்றம்: 

மேலும், மது வாங்கி குடிப்போர் மற்றும் மதுபாட்டில்களை பார்க்கும் மக்கள் மத்தியில் அதன் மூலம் ஏற்படும் தீமைகளை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அந்த மதுபாட்டில்களிலேயே  இடம்பெற்றிருக்கும். தற்போது வரை ‘மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது,அந்த வாசகம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக,

  • ‘மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு,
  • பாதுகாப்பாக இருப்பீர் 
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் பொதுமக்கள் விபத்துகளில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
  • அதை தடுக்கும் வகையில், இந்த வாசகத்தை தமிழக அரசு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்