கொரோனா தொற்றை தடுக்க இந்தியா முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன்எனப்படும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய தலைவலியை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திருச்சியில் சில தினங்களுக்கு முன்பாக 2 கடைகளின் கதவு கடைகள் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதனையடுத்து மதுபாட்டில்களை மதுப்பிரியர்களிடமிருந்து பாதுகாக்க திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய முறையை கையாண்டுள்ளது. அதாவது, அனைத்து மதுபாட்டில்களையும் ஒரே இடத்துக்கு மாற்றி அங்கு காவலர்கள் மூலம் பலத்த பாதுகாப்பு போட முடிவெடுத்தது. இந்த முடிவைத் தொடர்ந்து கடந்த இருநாட்களாக டாஸ்மாக் கடைகளில் இருந்து கடைகளிலிருந்து மதுபாட்டில்களை பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டு ஒரு மண்டபத்தில் சேர்க்கப்பட்டன. இந்த இடத்தை சுற்றி காவலர்கள் மூலம் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.மேலும், கண்காணிப்பு கேமராக்களும், டாஸ்மாக் ஊழியர்களும் மதுபாட்டில்களுக்கு பாதுகாவலுக்கு இருக்கின்றனர்.
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…