டாஸ்மாக் காலி பாட்டில்களால் ரூ.200 கோடி நஷ்டம்.! இபிஎஸ் பரபரப்பு குற்றசாட்டு.!

ADMK Chief Secretary Edappadi palanisamy

டாஸ்மாக்: அரசு மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை சேகரிக்காமல் விட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலைப்பிரதேசங்களில் தூக்கி எறியப்படும் காலி மதுபாட்டில்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு  விசாரணையில், ஒருநாளைக்கு 70 லட்சம் மதுபாட்டில்கள் டாஸ்மாக் மூலம் விற்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், செப்டம்பர் மாதம் முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் செய்லபடுத்த உள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் கூறியது. மனுதாரர் தரப்பில் கூறுகையில், டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்ப பெறுவதால் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காலி பாட்டில்கள் விவகாரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், உயர்நீதிமன்றஉத்தரவுப்படி கடந்த 3 ஆண்டுகளாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறாமல் திமுக அரசு செயல்பட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இது கண்டனத்திற்குரியது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உய்ரநீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரி, கோவை வடக்கு, கோவை தெற்கு, திண்டுக்கல், தேனி , நாகப்பட்டினம், நாகர்கோவில், தருமபுரி, பெரம்பலூர் , அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சில குடோன்களில் அரசு , காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தொடங்கினாலும், மீதம் உள்ள மாவட்டங்களில் டெண்டர் விடுவதில் இன்னும் தாமதம் செய்து வருகிறது. அரசுக்கு வருமானம் வரும் திட்டத்தை திமுக அரசு ஏன் தாமதப்படுத்துகிறது.?

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை விட்டு, சட்டவிதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம்விட்டு, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த  திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்