#BREAKING:டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்வு … அமைச்சர் தங்கமணி..
இன்று சட்டசபையில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
இந்த ஊதிய உயர்வால் 6,913 மேற்பார்வையாளர்கள், 15,347 விற்பனையாளர்கள்மற்றும் 3437 உதவி விற்பனையாளர்கள் பயன்பெறுவர். ஊதிய உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 15.42 கோடி கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.