டாஸ்மாக் வழக்குகள்.! இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை.!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை மாற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு டாஸ்மாக் இயங்க அனுமதிகொடுத்ததன் மூலம் தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனையின் பேரில் இயங்க அனுமதி கொடுத்தது.
ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், நீதிபதி வினித் கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய இரு அமர்விலிருந்து, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில் நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை மாற்றப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025