டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, மாநிலம் முழுவதும் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீலகிரி உள்ளிட்ட மலை மற்றும் காடு சார்ந்த மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, வனவிலங்குகளும் பாதிப்புக்குள்ளாகின்றன என புகார்கள் எழுந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வண்ணம் நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்து விட்டு கூடுதல் கட்டணமான ரூ.10-ஐ திரும்ப பெறும் நடைமுறை மே 15 ஆம் தேதி முதல்அமலுக்கு வந்தது.
இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். இந்த திட்டத்தை வகுத்து வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிடுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…