அரசு மதுக்கடை குடிப்பகத்தில் வழங்கப்பட்ட மதுவை குடித்தவர் உயிரிழக்க காரணம் என்ன? என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.
கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்திருக்கிறார்; சிவா என்பவர் கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது!
அரசு மதுக்கடை குடிப்பகத்தில் வழங்கப்பட்ட மதுவை குடித்தவர் உயிரிழக்க காரணம் என்ன? மதுவில் கலப்படமா? கள்ள மது விற்பனை செய்யப்பட்டதா? டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மது வகைகள் தரம் குறைந்தவையா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும்!
அரசு மதுக்கடைகளில் மது விற்பனை நண்பகல் 12 மணிக்குத் தான் தொடங்கப்பட வேண்டும் என்ற நிலையில், குடிப்பகத்தில் காலை 11.30 மணிக்கே மது வழங்கப்பட்டது எப்படி? டாஸ்மாக், காவல்துறை இதை வேடிக்கை பார்க்கின்றனவா? இது தொடர்பாக யார் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?
மது மனிதர்களைக் கொல்லும் நஞ்சு. அது சட்டப்பூர்வமாகவோ, சட்டவிரோதமாகவோ விற்கப்படக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் படிப்படியாகவோ, ஒரே கட்டமாகவோ மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…