டாஸ்மாக் கடை -பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
மதுக்கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்,அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது .மேலும்டாஸ்மாக் கடைவிதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து 6 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.