வயது வாரியாக மது விற்பனை செய்யப்படும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் உலுக்கி வருகிறது.எனவே வைரஸை தடுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில்ஓன்று தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் இந்தியாவில் மளிகை மற்றும் காய்கறி கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.3 -வது ஊரடங்கு சமயத்தில் தான் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.இந்த சமயத்தில் தான் ஒரு சில மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்தது.சுமார் 30 நாட்களுக்கு மேலாக மது அருந்தாமல் இருந்த மதுபிரியர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியாகவே அமைந்தது என்று கூறலாம்.ஆந்திரா,டெல்லி,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மது வாங்குவதற்கு காலை முதலே மதுபிரியர்கள் கூட்டம் கூடடமாக வந்து மது வாங்கி சென்றனர்.இது பெரும் விவாதத்தை கிளப்பியது .அதாவது இதனால் சமூக இடைவெளி பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்குஇடையில் தான் தமிழக அரசு சென்னை மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை தவிர பிற இடங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் தான் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ள நிலையில் வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து காவல்த்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதாவது , 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் , 40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் , 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…