தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு..எவ்வளவு தெரியுமா..?

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி, சமயபுரம், திருப்புராயத்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கார் மற்றும் ஜூப் போன்ற வாகனங்களுக்கு 10 முதல் 15 ரூபாய்வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமாக நடைமுறைதான் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.