தனது பிறந்தநாளையொட்டி ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
முதல்வரின் 70வது பிறந்தநாள்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு பிரதமர், ஜனாதிபதி மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பிரமாண்டமான பொதுக்கூட்டம் உள்ளிட பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்கள்:
இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். ஆதாவது, அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள் எனா அறிவித்துள்ளார்.
கல்விச்செலவு உயர்வு:
ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில், அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும். அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் கூறியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…