தஞ்சையில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவிப்பு…! போலீசார் விசாரணை…!
தஞ்சை ஓரத்தநாட்டில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு கவித்துண்டு அணிவித்ததாக அப்பகுதியில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
சமீப காலமாக உலக புகையால் பெற்ற தலைவர்களான திருவள்ளுவர், பெரியார் ஆகியோரின் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவித்துண்டு அணிவிப்பது போன்ற முறைகேடான செயல்களில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை ஓரத்தநாட்டில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு கவித்துண்டு அணிவித்ததாக அப்பகுதியில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காவித்துண்டை அணிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.