#Breaking:தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!
தஞ்சை:பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை தொடங்கியது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும்,விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி,கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து,தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது.ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,தஞ்சையின் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை வேலுவிடம்,தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி,குழந்தை வேலு அவர்களிடம்,தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூப் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில்,தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.