தஞ்சை தேர் விபத்து குறித்து இன்று விசாரணையை தொடங்குகிறார் வருவாய்த்துறை முதன்மை செயலாளர்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்த ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து, தஞ்சை தேர் விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த ஒரு நபர் விசாரணை குழு விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு இனி வரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த நிலையில், தஞ்சை தேர் விபத்து தொடர்பான விசாரணையை இன்று வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தொடங்குகிறார்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…