இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்கு 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக இந்திய உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோயம்புத்தூரில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டு நேற்றிலிருந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். சந்தேகத்தின் பெயரில் யாரேனும் தென்பட்டாலோ, அதேபோல் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தென்பட்டாலோ போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், தமிழக முக்கிய புண்ணிய ஸ்தலங்கள், என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக லக்னோ மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிவிரைவு படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு, உள்ளே செல்லும் பக்தர்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…