தமிழ்நாடு மின்சார துறையில் 2,400 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி, கட்டண விவரங்கள் உள்ளே!
- தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு பணிகளுக்காக தற்போது 2400 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியியலாளர் ( எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் ) என 5 விதமான பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் TANGEDCO வானது தற்போது மின்சார துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் ( எலெக்ட்ரிக்கல் ), உதவி பொறியாளர் ( மெக்கானிக்கல் ), உதவி பொறியாளர் (சிவில்) ஆகிய பணிகளுக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது.
இளநிலை உதவியாளர் :
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி – 10/01/2020 – 10/02/2020.
கணக்கீட்டாளர் :
கல்வி தகுதி : பி.காம் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி – 10/02/2020 – 09/03/2020.
உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில் ) :
கல்வி தகுதி : CIVIL, EEE, MECHANICAL, ECE, IT உள்ளிட்ட பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி – 24/01/2020 – 24/02/2020.
வயது வரம்பு :
பொதுப்பிரிவினர் – 18 வயது முதல் 30 ; பிற்படுத்தப்பட்டோர் – 18 வயது முதல் 32 ; SC/ST / மாற்று திறனாளிகள் / விதவைகள் – 18 வயது முதல் 35 வரை ;
கட்டண விவரம் :
SC/ST / மாற்று திறனாளிகள் / விதவைகள் – 500 ரூபாய் கட்டணம் ; மற்றவர்களுக்கு – 1000 ருபாய் கட்டணம்.
மேலும் விவரங்களுக்கு… https://www.tangedco.gov.in/