தாம்பூல தட்டில் முகக்கவசம்…! தன்னார்வலரின் நூதன விழிப்புணர்வு…!

முகக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி தாம்பூல தட்டில், வெற்றிலை பாக்குடன் முகக்கவசத்தை வைத்து தன்னார்வலர் ஒருவர் பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்நிலையில், மதுரையில், தன்னார்வலர் ஒருவர், முகக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி தாம்பூல தட்டில், வெற்றிலை பாக்குடன் முகக்கவசத்தை வைத்து தன்னார்வலர் ஒருவர் பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025