ரேம்ப் வாக்., சல்யூட்., ஒன்ஸ்மோர்., தவெக விஜயின் கன்னிப்பேச்சு.! மாநாடு முக்கிய நிகழ்வுகள்..,
திரளான தொண்டர்கள் வருகையால் முன்கூட்டியே மாநாடு தொடங்கியது முதல் விஜயின் அரசியல் கன்னிப் பேச்சு வரையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் சில முக்கிய அம்சங்களை காணலாம்.,
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 13 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் வருகை அதிகமாகி நண்பகலில் கூட்டம் இன்னும் அதிகரிக்கவே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாநாடு தொடங்கியது.
கிராமிய கலைகளுடன் தவெக முதல் மாநில மாநாடு தொடங்கியது. முதன் முதலாக பரை இசையுடன் மாநாடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. விஜயின் வருகையை எதிர்நோக்கி தவெக தொண்டர்கள் ‘தலைவா ., வா., ‘ என முழக்கமிட்டபடி ஆர்ப்பரித்தனர்.
ரேம்ப் வாக் :
மேடையை நோக்கி வந்த தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் முன் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோரின் ஆசி பெற்றார். பின்னர் மாநாடு திடலில் அமைக்கப்பட்ட 800மீட்டர் நீண்ட நடை பாதையில் தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் செய்தார்.
தவெக தலைவர் விஜய் ரேம்ப் வாக் செய்கையில் தொண்டர்கள் கட்சி துண்டுகளை அன்பாக வீச, அதனை லாவகமாக பிடித்து எனது தோளில் அணிந்து நடையை தொடர்ந்தார் தவெக தலைவர் விஜய். மீண்டும் மீண்டும் துண்டுகள் நடைமேடையில் விழவே அதனை எடுத்து தொண்டர்களிடம் அவரும் அன்பாக வீசி சென்றார்
சல்யூட் :
விஜய், மாநாடு நடை மேடையில் சென்று கொண்டிருக்கும்போது ஓய்வுபெற்று ராணுவ வீரர் ஒருவர் நடை மேடை தடையை மீறி ஏறி வந்து விஜய்யிடம் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு சல்யூட் செய்தார். அப்போது விஜயும் அவருக்கு பதிலுக்கு வணக்கம் செலுத்தி தனது நடையை தொடர்ந்தார்.
கொடியேற்றம் :
பின்னர் மேடை ஏறிய விஜய், ரிமோட் மூலம் பிரம்மாண்டப் கட்சி கொடி கம்பத்த்தில் தவக கட்சிக் கொடியை ஏற்றினார். அது மெல்ல மெல்ல ஏறியது. அப்போது தவெக கட்சிப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
பின்னர், தமிழ் தாய் வாழ்த்து முழுதாக பாடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழக நிர்வாகி உறுதி மொழியை கூற தொண்டர்கள் அதனை திருப்பிக் கூறினார். தவெக பொது செயலாளர் N.ஆனந்த் தவெக மாநாட்டை வரவேற்று உரையாற்றினார்.
ஒன்ஸ்மோர் :
தவெக கட்சியின் இரண்டாவது பாடல் மேடையில் ஒலிபரப்பப்பட்டது. அதில், தந்தை பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய தலைவர்கள் தங்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் என விஜய் குறிப்பிட்டார். இந்த பாடல் தொண்டர்களால் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு மீண்டும் ஒலிபரப்பப்பட்டது.
கொள்கை – செயல்திட்டங்கள் :
பின்னர், தவெகவின் கொள்கைகளும் செயல்திட்டங்களும் கூறப்பட்டன. ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்குவது, தமிழ் மொழி ஆட்சி மொழியாகவும் வழக்காடு மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் மாற்றப்படும் எனக் கூறியது, மாநில தன்னாட்சி, இரு மொழி கொள்கை, சாதி மத என பிரிவுகளுக்கு கீழ் யாரையும் சுருக்கக் கூடாது. மதுரையில் தலைமைச் செயலகத்தின் கிளை அமைக்கப்படும், ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும், தமிழ்நாட்டின் மாநில பானமாக பதநீர் அறிவிக்கப்பட வேண்டும், கதர் ஆடை, சாதிவாரி கணக்கெடுப்பு என பல கொள்கை செயல் திட்டங்கள் ஆகியவை அனைவரையும் ஈர்த்தன.
வீர வாள் :
இந்த நிகழ்வு முடிந்த பிறகு பொதுச்செயலாளர் N.ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்க்கு வீர வாளை பரிசளித்தார். அதனை உற்சாகமாக வாங்கி தொண்டர்களுக்கு உயர்த்தி காட்டினார் விஜய்.
கன்னிப் பேச்சு :
பின்னர், தனது உரையை தொடர்ந்தார் தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாடு கூறி ‘அனைவருக்கும் என் உயிர் வணக்கம்’ எனக் கூறி உரையை தொடங்கினார். பின்னர் தனது கட்சி வழிகாட்டிகள், தான் ஏன் அரசியலுக்கு வந்தேன்.? 2026 தேர்தல் களம், ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு, திராவிட மாடல் எதிர்ப்பு, பிரிவினைவாத அரசியல் என தனது அரசியல் கருத்துகளை மிகத் தெளிவாகவும் முழு வீச்சுடனும் பேசி முடித்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.