தலைவாசல் சுங்கச்சாவடி மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தாக்குதல்..?

Default Image

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் சுங்கசவடி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நேற்று “தமிழர் வேலை தமிழருக்கே” என்ற தலைப்பில் சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வந்த அனைவரும் அவரவர்கள் தங்களது மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடலூருக்கு சென்ற கொண்டு இருந்த வாகனத்தில் வந்தவர்கள் சுங்கசவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சுங்கசவடி அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் சுங்கசவடி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைவாசல் சுங்கசவடி அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்