நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..!
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் அறிவிக்க இன்னும் சில நாட்களுக்கே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதிகள் பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து வருகிறது. அதன்படி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தல ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
READ MORE- மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின்
இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிவித்தார்.