மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியை மாநில தலைவராக நியமனம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு முடிவுகளை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிமுன் அன்சாரி மாநில தலைவராக தனது பணிகளை தொடருவார் என தலைமை நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய மாநில தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு, தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அப்போது, கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் ஜெஎஸ். ரிஃபாயீ, துணைத்தலைவர் மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளர் செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…