தமிழ்தாய் வாழ்த்து: இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? – கனிமொழி எம்பி காட்டம்

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? என்று தமிழ்தாய் பாடல் விவகாரத்தில் கனிமொழி எம்பி ட்வீட்.

நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனுடன் தமிழ்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு வெளியிட்டியிருந்த அரசாணையும் வெளியிட்டு மேற்கோள்கட்டியுள்ளார்.

அந்த அரசாணையில், தமிழ்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வரசாணையின் படி, தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை, கனிமொழி எம்பி மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!

கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!

புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

19 seconds ago

லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…

12 minutes ago

KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago

சடசடவென சரிந்த SRH-ன் ‘டைனோசர்’ கூட்டணி! வெற்றி களிப்பில் கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…

8 hours ago

KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…

9 hours ago

அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…

10 hours ago