தமிழர்கள் முடிந்தவரை மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்-வெங்கையா நாயுடு
தமிழ் கற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவே முக்கியம்.இந்தியாவுக்குள் பலர் படை எடுத்தார்கள், செல்வத்தை சுரண்டினார்கள்.
தமிழராக பிறந்து தமிழ் கற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும். தொடக்கக்கல்வி தாய் மொழியில்தான் இருக்க வேண்டும் . தமிழர்கள் முடிந்தவரை மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். சட்டமுறைகளை முறையாக பின்பற்றினால், பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்தை பிடிக்க வாய்புள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.