அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தமிழருக்கு பெருமை – விஜயகாந்த்

Published by
கெளதம்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தமிழருக்கு பெருமை என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர்  ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.  அதேநேரத்தில் துணை அதிபருக்கான தேர்வும் நடைபெறவுள்ளது.

இதனால், துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார்.  இந்நிலையில், துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ்  துணை போட்டியிட தேர்வு செய்யப்பட்டதாக  ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறுகையில், கமலா ஹாரிஸ் தமிழ் தோற்றத்தைச் சேர்ந்தவர், இவர் துணை வேட்பாளராக அமெரிக்க ஜனநாயகக் கட்சி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் பெருமைமிக்க தருணம் என்று கூறி கமலாஹரிஸ் அமெரிக்க தேர்தல்களில் அனைத்து வெற்றிகளும் பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரீஸ்  தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கடந்த 2016-ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க செனட் சபைக்கு தேர்வு பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையும் ஏற்கனவே இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

15 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

27 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

39 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

45 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago