தெலங்கானாவை தமிழகம் பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின்.!
தெலங்கானா அரசு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு நடத்துவது சரியா..? என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர். இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? என கேள்வி எழுப்பியது.
இதைத்தொடர்ந்து,பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தது.
3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா?
நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO காட்டும் வழியையாவது @CMOTamilNadu பின்பற்ற வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) June 8, 2020